Skip to main content

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் நீக்கம்

Published on 29/09/2017 | Edited on 29/09/2017
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் நீக்கம்

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ தொகுதியில் உள்ள பாபு பனாரசி தாஸ் வார்டில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் வசித்து வந்தார். அப்பகுதிக்கான வாக்காளர் பட்டியலில் வாஜ்பாய் பெயர் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பெயர் நீக்கப்பட்டுள்ளது என நகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, மண்டல அதிகாரி அசோக் குமார் சிங் கூறுகையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் பாபு பனாரசி தாஸ் வார்டில் இடம் பெற்றிருந்தது. கடந்த 2000-ம் ஆண்டில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வாஜ்பாய் வாக்களித்தார். அதை தொடர்ந்து, 2004-ல் நடைபெற்ற மக்களவை தொகுதி தேர்தலிலும் இங்கு வாக்களித்தார். அதன்பின்னர், உடல்நிலை சரியில்லாததால் வாஜ்பாய் நீண்ட காலமாக இந்த வார்டில் வசிக்கவில்லை. எனவே அவரது பெயர் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்