Vadakadu incident! Another person arrested!

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் இரு தரப்பினர் மோதல் சம்பவத்தில் இருதரப்பையும் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஒரு தரப்பைச் சேர்ந்த 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல மற்றொரு தரப்பில் மொத்தம் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று மேலாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் மகன் மதன் (19) கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் இதுவரை 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது நடவடிக்கை தொடரும் என்கின்றனர்.