
கள்ளக்குறிச்சியில் தமிழக அரசின் தொகுப்பு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளில் சுவர்கள் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் மூன்று பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள செஞ்சிக்குப்பம். இந்த பகுதியில் பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் உள்ளிட்ட வீடு இல்லாத மக்களுக்காக தமிழக அரசு சார்பில் 100 தொகுப்பு வீடுகள் கட்டும் பணியானது நடைபெற்று வருகிறது. இதற்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் ஒப்பந்ததாரர் கட்டுமான பணிகளை தரமாக மேற்கொள்ளாததால் நேற்று இரண்டு வீடுகளின் சுவர்கள் கட்டுமானத்தின் போது இடிந்து விழுந்தது.
இதில் மூன்று பேர் லேசான காயத்துடன் மீட்கப்பட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் ஆய்வு செய்து ஒப்பந்ததாரரை கடுமையாக சாடினார். இதுபோன்ற விபத்துக்களை இனி நடைபெறக் கூடாது என எச்சரித்தார்.