manipur

Advertisment

மணிப்பூர் மாநிலத்தில்உக்ருல் மாவட்டத்தின்ஷிருய் பகுதியில் இன்று (09.11.2021) காலை 9.47 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ஷிருய் பகுதியிலிருந்து வடகிழக்காக 62 கிலோமீட்டர் தூரத்தில், 60 அடி ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால்ஏற்பட்ட பாதிப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. மணிப்பூர் மாநிலத்தில் நேற்றும்நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்றுஉக்ருல் மாவட்டத்திலிருந்து தென்கிழக்காக 56 கிலோமிட்டர்தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.

நேற்று காலை 7.48 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.