Skip to main content

வாக்காளர்களை பரிசுகளுடன் சந்தியுங்கள்! - பாஜகவினருக்கு அமைச்சர் தந்த அறிவுரை

Published on 11/02/2018 | Edited on 11/02/2018
Patil

 

தேர்தலுக்கு முன்பாக வாக்காளர்களைச் சந்திக்கும் போது வெறும் கையோடு செல்லாமல், பரிசுகளோடு செல்லவேண்டும் என மகாராஷ்டிரா மாநில அமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார்.

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சாங்லி மிராஜ் குப்வாட் மாநகராட்சிக்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் குறித்த பாஜகவின் திட்டமிடல் கூட்டம் நேற்று முன்தினம் சாங்லியில் வைத்து நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல், ‘தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு விட்டன. நம் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தேர்தல் வேலைகளில் சிறப்பாக செயல்பட வேண்டும். குறைந்தது 200 குடும்பங்களையாவது நேரில் சந்தித்து அவர்களோடு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். வாக்காளர்களைச் சந்திக்கும்போது வெறும் கையில் செல்லாமல், பரிசுகளோடு செல்லவேண்டும்’ என அறிவுரை வழங்கியுள்ளார்.

 

இதுகுறித்து மகாராஷ்டிர மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான தனஞ்செய் முண்டே, ‘பாஜகவும், சிவசேனாவும் தகாத முறையில் சேர்த்த பணத்தை தேர்தலில் பயன்படுத்தப் பார்க்கின்றன. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முறையாக செயல்பட வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘தோல்விக்கு காரணம் இது தான்’ - பா.ஜ.க மீது ஏக்நாத் ஷிண்டே பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 12/06/2024 | Edited on 12/06/2024
Eknath Shinde sensational accusation against BJP

நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில், அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகளின் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை அமைத்தது. 

ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். அதன்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளார். 

இருப்பினும், பா.ஜ.கவின் கோட்டையாக இருக்கக்கூடிய உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களின் கூட காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. அந்த வகையில், மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி 30 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. பா.ஜ.க 9 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. பா.ஜ.க கூட்டணியில் உள்ள சிவசேனா 7 இடங்களிலும், அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 1 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தது. அதனால், மகாராஷ்டிராவில் பா.ஜ.கவிற்கு ஏற்பட்ட தோல்வியால் மகாராஷ்டிரா துணை முதல்வராக உள்ள பா.ஜ.கவின் மூத்த தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ், தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் எனத் தகவல் வெளியானது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பா.ஜ.க கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே பா.ஜ.க மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “பொய்யான கதைகள் கட்டமைக்கப்பட்டதால் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது சில இடங்களில் தோல்வியை சந்தித்தோம்.  மகாராஷ்டிராவில் நாங்கள் தோல்வியை சந்தித்தோம். எதிர்க்கட்சிகள் அரசியல் சாசனம் மாற்றப்படும், இடஒதுக்கீடு நீக்கப்படும் என்று பொய்யான கதையை கூறினர். ஆனால் உண்மையில் அப்படி எதுவும் நடக்கப் போவதில்லை. 400 இடங்களை வெல்வோம் என்ற முழக்கம் மக்களிடையே தவறான எண்ணங்களை உருவாக்கியுள்ளது. மேலும், அந்த முழக்கம் எதிர்காலத்தில் பிரச்சனைகளை உருவாக்கும் என்ற அச்சத்தை மக்கள் மனதில் எழுப்பியுள்ளது” என்று கூறினார். 

மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது, பா.ஜ.க அதிக பெரும்பான்மையுடன் 400 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்றும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவார்கள் என்றும் பா.ஜ.கவினர் கூறி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

"பாஜக கூட்டணியில் இணைந்தால் உரிய மரியாதை"- சரத்பாவருக்கு ராம்தாஸ் அத்வாலே அழைப்பு!

Published on 23/11/2019 | Edited on 23/11/2019

மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் சிவசேனாவுக்கும் பாஜகவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இரண்டு கட்சிகளும் கூட்டணியில் இருந்து பிரிந்தன. இதன் காரணமாக யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

 

Ramdas Atwale

 

இந்நிலையில் நேற்று காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் , சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்த மூன்று கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேலையில், எதிர்பாராத விதமாக இன்று காலையில் ஆளுநர் முன்னிலையில் மஹாராஷ்ட்ரா முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பத்னாவிஸும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் பதவி ஏற்றுக்கொண்டனர். 

இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், "இது அஜித்பவாரின் தனிப்பட்ட முடிவு. பாஜக ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தரவில்லை" என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இது மகாராஷ்டிரா அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பான சூழலில், "பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இணைந்தால், அவருக்கு உரிய கவுரவம், அங்கீகாரம் வழங்கப்படும்" என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.