Skip to main content

சிறையில் ஆண்-பெண் கைதிகள் சந்தித்துப் பேச உதவியதாக 4 பேர் சஸ்பெண்ட்!

Published on 11/10/2017 | Edited on 11/10/2017
சிறையில் ஆண்-பெண் கைதிகள்
சந்தித்துப் பேச உதவியதாக 4 பேர் சஸ்பெண்ட்!

புதுச்சேரி மத்திய சிறையில் ஆண்கள், பெண்கள் சிறை பகுதிகள் உள்ளது. இதில் ஆண்கள் சிறையில் உள்ளவர்கள் பெண்கள் சிறைக்கும், பெண்கள் சிறையில் உள்ளவர்கள் ஆண்கள் சிறை வளாகத்திற்க்கும் செல்ல தடை உள்ளது.

இந்நிலையில் வார்டன்கள் அனுமதியுடன் சிறையில் உள்ள ஆண் கைதிகள் பெண்களை பார்ப்பதற்கு அனுமதிப்பதாக குற்றசாட்டு எழுந்தது. இதனை அடுத்து  புதுச்சேரி மத்திய சிறை துணை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ், முதன்மை வார்டன் வீரவாசு, வார்டன் கலாவதி, ஒரு காவலர்  உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிறையில் ஆண்-பெண் கைதிகள் சந்தித்துப் பேச உதவியதாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைதி தகவல்களை வெளியில் உள்ளவரிடம் தெரிவிப்பது அங்கிருந்து தகவல் கொண்டு வருவது, மொபைல் போன் வழங்கி உதவியது உட்பட பல குற்றங்களுக்காக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- சுந்தரபாண்டியன்

சார்ந்த செய்திகள்