Skip to main content

ஆண்டாள் சர்ச்சைக்குப் பின் வைரமுத்துவின் அடுத்த இலக்கியப் பேருரை!

Published on 13/02/2018 | Edited on 13/02/2018
vairamuthu


கடந்த மாதம் ராஜபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து அவதூறாகப் பேசியதாகவும், இதனால் ஆண்டாள் கோயிலுக்கு நேரில் வந்து வைரமுத்து மன்னிப்பு கேட்கக் கோரியும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் உண்ணாவிரதம் இருந்தார். இதையடுத்து அறநிலையத் துறை அதிகாரிகள், காவல்துறையினர் அரசு சார்பில் கேட்டுக்கொண்டதால் உண்ணாவிரதத்தை கைவிட்டதாக தெரிவித்தார்.

ஆனாலும், கவிஞர் வைரமுத்து திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு பிப். 3-ம் தேதிக்குள் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையெனில் உண்ணாவிரதத்தை மீண்டும் தொடர்வதாகவும் அறிவித்திருந்தார்.

காலக்கெடு முடிந்தும் கவிஞர் வைரமுத்து ஆண்டாள் கோயிலுக்கு நேரில் வந்து மன்னிப்பு கேட்காததால், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் கடந்த பிப்.8-ல் மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். இதையடுத்து ஓரேநாளில் மீண்டும் தனது உண்ணாவிரத போராட்டத்தை ஜீயர் கைவிட்டர். அதன்பின், வைரமுத்துக்கு எதிராக சட்ட ரீதியாக போராடுவேன் என்று அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஜீயரின் போராட்டத்தை முற்றிலும் கண்டுகொள்ளாத வைரமுத்து, வழக்கம் போல் தன் பணிகளை செய்து வருகிறார். அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு சென்னை, காமராஜர் அரங்கத்தில் மறைமலையடிகள் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை ஆற்றுகிறார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“கலைஞர் கையைப் பிடித்துக் கொண்ட உணர்வு” - வைரமுத்து நெகிழ்ச்சி

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
vairamuthu about kalaignar memorial

சென்னைக் கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணா 1969 பிப்ரவரி 3 ஆம் நாள் மறைந்த பின் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. மேலும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் தனது 95 வது வயதில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் நாள் மறைந்த பின்னர் அண்ணா நினைவிடம் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. அதே சமயம் அண்ணா நினைவிடம் புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற்றன.

மேலும் அண்ணா, கலைஞர் ஆகியோரின் இரண்டு நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் பேரறிஞர் அண்ணா நினைவிடம், முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் எனும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (26.11.2024) மாலை 7 மணி அளவில் திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. 

இந்த நிலையில் கலைஞர் நினைவிடம் குறித்து வைரமுத்து நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “கலைஞர் நினைவிடம்
கண்டு சிலிர்த்தேன் 

கலைஞரின்
கையைப் பிடித்துக்கொண்டே
கலைஞர் நினைவிடம்
சுற்றிவந்த உணர்வு

இது தந்தைக்குத் 
தனயன் எழுப்பிய மண்டபமல்ல
தலைவனுக்குத்
தொண்டன் கட்டிய தாஜ்மஹால்

‘இப்படியோர் நினைவிடம்
வாய்க்குமென்றால்
எத்தனை முறையும் இறக்கலாம்’

கலைஞர் கண்டிருந்தால்
கவிதை பாடியிருப்பார்

உருவமாய் ஒலியாய்
புதைத்த இடத்தில்
கலைஞர் உயிரோடிருக்கிறார்

உலகத் தரம்

நன்றி தளபதி” என குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“உலக தேசிய இனங்கள் விழிப்போடிருக்கவேண்டிய வேளை இது” - வைரமுத்து

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
vairamuthu about international mother language day

உலக தாய்மொழி தினம் 2000ஆம் ஆண்டிலிருந்து பிப்ரவரி 21ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. தாய்மொழியின் சிறப்பு, அவசியம், பன்மொழி கலாச்சாரம் ஆகியவற்றை போற்றவும் உணர்த்தும் வகையிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. 

இந்த நிலையில்  உலக தாய்மொழி தினமான இன்று தமிழ் ஆர்வலர்கள் பலரும் அது தொடர்பாக சமுக வலைதளங்களில் வாழ்த்து பதிவு பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து, அவரது எக்ஸ் பக்கத்தில், “வாழ்த்து அச்சம் இரண்டையும் பகிர்ந்து கொள்கிறேன். தாய் என்ற அடைமொழிகொண்ட சொற்களெல்லாம் உயர்ந்தவை; உலகத் தன்மையானவை மற்றும் உயிரோடும் உடலோடும் கலந்தவை. தாய்நாடு தாய்ப்பால் தாய்மொழி இவை எடுத்துக்காட்டுகள்.  

ஆனால், உலகமயம் தொழில்நுட்பம் என்ற பசிகொண்ட பற்கள் இரண்டும் தாய்மொழியின் தசைகளைத் தின்னுகின்றன. உலக தேசிய இனங்கள் விழிப்போடிருக்கவேண்டிய வேளை இது. அரசு, ஆசிரியர், பெற்றோர் மாணவர், ஊடகம் என்ற ஐம்பெரும் கூட்டணிகளால் மட்டுமே இந்தப் பன்னாட்டுப் படையெடுப்பைத் தடுக்கமுடியும். சரித்திரத்தின் பூகோளத்தின் ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும்.  எங்கள் தாய்மொழி, எங்கள் அடையாளம் மற்றும் அதிகாரம்” என்றார்.