court

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

கடந்த நவம்பர் 30-ஆம் தேதி நடந்த விசாரணையில் சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்துசிலைகடத்தல் தடுப்பு பிரிவுஐஜி பொன்மாணிக்கவேலே வழக்குகளை விசாரிக்க வேண்டும் எனசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது, தமிழக அரசின் இந்த அரசாணை சட்டவிரோதமானது என்றுகூறி மேலும் ஒரு வருடத்திற்கு பொன்மாணிக்கவேலை சிலைகடத்தல் தடுப்புபிரிவுசிறப்பு அதிகாரியாகவும் உயர்நீதிமன்றம்நியமித்திருந்தது,

Advertisment

அதனை அடுத்து சிலைகடத்தல் தடுப்புபிரிவு ஐஜி பொன்மாணிக்கவேலுக்கு உயர்நீதிமன்றம் வழங்கியசிறப்புபதவி நீட்டிப்பு நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு சார்பில் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில்மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் அசோக் பூஷன், நாகேஸ்வரராவ் ஆகியோருடைய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் சிலைகடத்தல் தடுப்புபிரிவுசிறப்பு அதிகாரியாக பொன்மாணிக்கவேல் நியமிக்கபட்டதற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது உச்சநீதிமன்றம்.