Shock at the death

நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள மேல நீலித நல்லூர் ஒன்றியத்தின் முத்து கிருஷ்ணாபுரம் கிளை முன்னாள் திமுக செயலாளர் செந்தூர் பாண்டியன்.

Advertisment

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது திமுக தலைவர் கலைஞரின் உடல் நலத்தில் பின்னடைவு என வந்த செய்தியால் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுதொடர்பாக அவர் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

உடனடியாக அவரை சங்கரன் கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. திமுகவினர் ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

Advertisment

இதேபோல் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் குள்ளக்கா பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த ரா.அம்சகுமார், கடந்த இரண்டு நாட்களாக வீட்டிலிருந்து கலைஞர் உடல் நலம் குறித்த செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்து வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தொலைக்காட்சியில் செய்திகளை பார்த்துக்கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

பெரம்பலூர் மாவட்டம், லாடாபுரம் கிராமத்தில் திமுகவைச் சேர்ந்தவரும், ஒய்வுப் பெற்ற ஆசியருமான ந.நல்லுசாமி, கலைஞரின் உடல்நிலை குறித்து பரவிய வதந்தியால் கடந்த 3 நாட்காளக மன உளைச்சரில் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கலைஞர் பற்றிய செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு நாற்காலியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். மாரடைப்பால் உயிரிழந்த ந.நல்லுசாமி முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் உறவினர்.