நிர்மலா சீத்தாராமனை சந்தித்த தங்கமணி

தமிழக மின்சார துறை மந்திரி பி.தங்கமணி நேற்று டெல்லியில் மத்திய ரெயில்வே மற்றும் நிலக்கரித் துறை மந்திரி பியூஷ் கோயலை சந்தித்து பேசினார். அப்போது, மின் உற்பத்திக்கு தமிழகத்துக்கு கூடுதலாக நிலக்கரி ஒதுக்கவேண்டும் என்று பியூஷ் கோயலிடம் அவர் கேட்டுக் கொண்டார். இது தொடர்பான கடிதம் ஒன்றையும் அவர் வழங்கினார். மேலும் பி.தங்கமணி துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் சென்று மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை ராஜாங்க மந்திரி (தனி பொறுப்பு) ஆர்.கே.சிங்கையும் சந்தித்து பேசினார். அப்போது இதுபோன்ற கடிதத்தை அவரிடம் வழங்கினார்.
டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனையும் அமைச்சர் தங்கமணி சந்தித்துப் பேசினார்.