Skip to main content

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்.... ஸ்மார்ட் போன் உபயோகிப்போருக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை...

Published on 03/09/2019 | Edited on 03/09/2019

தொடர்ந்து பப்ஜி விளையாடியதால் 19 வயது இளைஞர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிகழ்வு ஹைதராபாத்தில் நடந்துள்ளது.

 

pubg player paralysed

 

 

கடந்த 26ம் தேதி ஹைதராபாத்தில் 19 வயது இளைஞர் திடீரென பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.  அந்த இளைஞரின் வலது காலும், கையும் செயல்படாமல் போயுள்ளது. உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இளைஞரை பரிசோதித்த மருத்துவர்கள் மூளையில் ஏற்பட்ட ரத்தத் தடையால் பக்கவாதம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். இந்த நிலையில் அந்த இளைஞரின் விரிவான மருத்துவ அறிக்கை மூலம், அந்த இளைஞர் தொடர்ந்து பப்ஜி விளையாடியதே உடல்நலக்குறைவுக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

உடல்நிலையில் கவனம் கொள்ளாமல் தொடர்ந்து நீண்ட நேரம் ஆன்லைன் விளையாட்டுகளில் தொடர்ந்து மூழ்குவதே இந்த மாதிரியான பிரச்னைகளுக்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் பெற்றோர் தங்களின் குழந்தைகளின் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை கண்காணித்து, அவர்களுக்கு தேவையான ஓய்வு கிடைக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டன் கணக்கில் பிடிபட்ட போலி இஞ்சி பேஸ்ட்; பொதுமக்களே உஷார்

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
Tons of fake ginger paste caught; Public beware

உணவு பொருள்களின் தரம் மற்றும் தரமற்ற உணவுப் பொருட்கள், போலியான கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் குறித்த வீடியோக்கள், தகவல்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவி வரும் நிலையில், ஹைதராபாத்தில் டன் கணக்கில் போலி இஞ்சி பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹோட்டல்கள் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் பொருட்கள் விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அடிக்கடி திடீர் சோதனையில் ஈடுபட்டு தரம் இல்லாத பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடைகளில் பிரபல நிறுவனங்களின் பெயரில் கிடைக்கும் இஞ்சி பேஸ்ட் போல ஹைதராபாத்தில் சில நபர்கள் பாக்கெட்டுகளில் போலியாக இஞ்சி பேஸ்ட் தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் சென்ற அதிகாரிகள் அதை பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள பொருட்களின் மதிப்பு 2 லட்சம் ரூபாய் என்பது தெரியவந்துள்ளது. உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் செயற்கையான உணவுப் பொருட்கள் மற்றும் வண்ணம், பசை ஆகியவற்றை கலந்து இந்த போலி இஞ்சி பேஸ்ட் தயாரிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 3 டன் அளவில் போலி இஞ்சி பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

சிரித்த முகம் வேண்டும்; நூதன முயற்சியால் தொழிலதிபர் உயிரிழப்பு

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
 Surgery for smiling face; businessman dies

ஹைதராபாத்தை சேர்ந்த 28 வயது தொழிலதிபர் சிரித்த முகம் வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சை செய்துகொள்ள முயன்றபோது சிகிச்சையின் போதே உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த 28 வயது தொழிலதிபர் லட்சுமி நாராயணன். அண்மையில் லட்சுமி நாராயணனுக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தனக்கு சிரித்த முகம் இருக்க வேண்டும் என்பதற்காக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என முடிவெடுத்து ஹைதராபாத் ஜூபிலி பகுதியில் உள்ள எப்.எம்.எஸ் இன்டர்நெஷனல் டெண்டல் கிளினிக்கில் கடந்த 16 ஆம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

தான் அறுவை சிகிச்சை செய்யப்போவதை வீட்டில் யாருக்கும் லட்சுமி நாராயணன் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. கிளினிக்கிற்கு தனியாக சென்ற அவருக்கு அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து அறுவை சிகிச்சை நடந்துகொண்டிருக்கும்போதே அவர் உயிரிழந்தார். இதற்கிடையில் லட்சுமி நாராயணின் தந்தை ராமுலு அவருக்கு போன் செய்துள்ளார். அப்பொழுது அழைப்பை எடுத்த கிளினிக் ஊழியர்கள் அவர் இறந்துவிட்டதை தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை ராமுலு  அலறித்துடித்துள்ளார்.

தொடர்ந்து அதிகஅளவிலான மயக்க மருந்து கொடுத்ததால் தன் மகன் உயிரிழந்ததாக போலீசில் லட்சுமி நாராயணனின் தந்தை புகார் அளித்துள்ளார். அவரின் புகாரில் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.