Skip to main content

கர்நாடக துணை முதல்வருக்கு கரோனா தொற்று...

Published on 19/09/2020 | Edited on 19/09/2020

 

karnataka deputy cm tests positive for corona

 

கர்நாடக துணை முதல்வர் அஷ்வத் நாராயணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் துணை முதல்வராகப் பதவிவகித்து வருகிறார் அஷ்வத் நாராயண். இவருக்கு இன்று கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ள அவர், "சட்டசபை கூட்டத்தொடர் வரவுள்ள நிலையில், நான் கரோனா பரிசோதனை மேற்கொண்டேன்.

 

அதன் முடிவில் எனக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனக்கு அறிகுறிகள் எதுவுமில்லை. எனவே, நான் வீட்டிலேயே என்னைத் தனிமைப்படுத்திக் கொள்கிறேன். என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளும்படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவு!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
Cauvery Water Management Committee orders to open water to TN

காவிரியில் இருந்து நீர் திறப்பது தொடர்பாக தமிழகம் கர்நாடகா இடையே தொடர்ந்து பிரச்சனை நீடித்து வருகிறது. இந்தப் பிரச்சனையை தீர்த்து வைக்க மத்திய அரசு சார்பில் காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவும் அமைக்கப்பட்டன. இந்நிலையில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 99வது கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று (11.07.2024) நடைபெற்றது.

அப்போது தமிழக அரசு தரப்பில், “கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு உரிய கர்நாடக அரசு நீரை திறந்து விடவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான நீரை உரிய முறையில் திறந்து விடவில்லை. அதோடு இந்த ஆண்டு கர்நாடகாவில் வழக்கமான மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. ஆனாலும் கூட கர்நாடக அரசு சார்பில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறக்காமல் இருப்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறும் செயல். ஆகவே தண்ணீரை திறக்க உத்தரவிடுங்கள்” என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

கர்நாடக அரசோ வழக்கம் போல தங்களுக்கே தண்ணீர் பற்றாக்குறை இருக்கிறது போன்ற கருத்துகளை முன் வைத்தனர். இதனையடுத்து காவிரி ஒழுங்காற்று குழு, “தமிழகத்திற்கு நாளை (12.07.2024) முதல் வரும் 31ஆம் தேதி வரை நாள் தோறும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்” என கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு செல்லும் நீரின் அளவு 1 டிஎம்சியாக இருப்பதை கர்நாடக அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Next Story

அடுத்த 3 மணி நேரம்; 9 மாவட்டங்களுக்கு அலர்ட்

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
For the next 3 hours; Alert for 9 districts

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், சென்னை,  செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சென்னையைப் பொறுத்தவரையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி தமிழகத்தின் நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இந்திய வானிலை ஆய்வு மையம் தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் அதீத கனமழை பொழிந்து வருகிறது. குடகு உட்பட ஐந்து மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின்  ஹசன் மாவட்டத்தில் இன்று கனமழைக்கான  மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் தட்சண கன்னடா மாவட்டத்தில் மூல்கி பகுதியில் 30 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.