
கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆசனூர் சிப்காட் பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை ஆவடி பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் காரில் சென்று கொண்டிருந்தனர். திருச்சியை சேர்ந்த லூர்தீன் என்பவர் காரை இயக்கியுள்ளார். அப்பொழுது கார் கள்ளக்குறிச்சி ஆசனூர் சிப்காட் பகுதியில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது தடுப்பு கட்டை மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது. இதில் காரில் பயணம் செய்த திருச்சி மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் அப்துல் ரகுமான், அவரது குடும்பத்தினர் பெண்கள், 3 குழந்தைகள் என 10 பேர் படுகாயம் அடைந்தனர். மீட்கப்பட்ட அனைவரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.