
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக்கத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வெயில், வரட்சியான சூழ்நிலை காரணமாக யானைகள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவதும், சத்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாலையை கடந்து செல்வதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் தாளவாடி எடுக்க அருள்வாடி கிராமம் அருகே ஒரு தோட்டத்திற்குள் நேற்று இரவு புகுந்த ஒற்றை யானை பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. அங்கு காவலில் விழுந்த விவசாயி திடீரென சத்தம் கேட்டு உள்ளதால் டார்ச் லைட்டை அடித்து சத்தம் வந்த பகுதியில் பார்த்து உள்ளார். அப்போது ஒற்றை யானை ஒன்று தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்திக் கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அருகே தோட்டத்தில் இருக்கும் விவசாயிகளிடம் தகவலை சொல்லி அவர்களை வரவழைத்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போக்கு காட்டிய அந்த ஒற்றை யானையை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டினர்.