Skip to main content

தப்புக்கணக்கு போடும் சோனியா காந்தி கணக்கில் வீக்.. மத்திய அமைச்சர் கிண்டல்!!

Published on 19/07/2018 | Edited on 19/07/2018

மீண்டும் சோனியா காந்தி தப்புக்கணக்கு போடுகிறார் அவர் கணக்கில் வீக் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்தகுமார் கூறியுள்ளார். 

 

SONIA GANDHI

 

 

 

நேற்று நடந்த மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளே தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் கேசினேனி சீனிவாஸ் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படுவதாக சபாநாயகர்  மகாஜன் அறிவித்தார். அதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்  மல்லிகார்ஜூன கார்கே நாங்கள்தான் பெரிய கட்சி எனவே நாங்கள் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்க வேண்டும் என முறையிட்டார்.  பெரிய கட்சியோ சிறிய கட்சியோ கொடுக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நாளை முழுவதும் நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றிய விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெறும் எனவே நாளை மற்ற அலுவல் பணிகள்  நடைபெறாது என சபாநாயகர் தெரிவித்தார்.

 

அதெபோல் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்தகுமார் மற்ற கட்சிகளால் கொண்டுவரப்பட்டிருக்கும்  நம்பிகையில்லா தீர்மானத்தை சந்திக்க அரசு தயார் என தெரிவித்தார். 

 

 

 

மொத்தம் 535  உறுப்பினர்களை கொண்ட மக்களவையில் பாஜவின் சொந்த எம்பிக்கள் எண்ணிக்கை சபாநாயகர் உட்பட 274. கூட்டணி கட்சிகளின் ஆதரவு என மொத்தம்  313 உறுப்பினர்களின் ஆதரவு பாஜகவிற்கு உள்ளது. இந்நிலையில் மழைக்கால கூட்டத்தொடரில் முதல் நாளான நேற்றே நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்கப்பட்டு நாளை விவாதமும் ஓட்டெடுப்பும் நடக்கவிருப்பது அங்கு சற்று சலசலப்பையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் பாஜகதான் வாக்கெடுப்பில் அதிக ஆதரவுகளை பெரும் என்று கருத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி எங்களிடம் பெரும்பான்மை இல்லை என்று யார் சொன்னது என்று கேள்வி எழுப்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

 

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்தகுமார், சோனியா காந்தி 1996-லிருந்த வாஜ்பாய் தலைமையில் நடந்த அரசை நினைவில் வைத்துக்கொண்டு அப்படி பேசுகிறார். வாஜ்பாய் ஆட்சிக்கு பிறகு பாஜகவிற்கு இனி வாய்ப்பே இல்லை என எல்லோரும் கருதினார்கள் ஆனால் தற்போது அந்த எண்ணமே உடைக்கப்பட்டதால்தான் இன்று பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. 

 

சோனியா காந்தி மீண்டும் தப்புக்கணக்கு போட்டுள்ளார். பாராளுமன்றத்திற்கு  உள்ளேயும் வெளியேயும் எங்களுக்குத்தான் பெரும்பான்மை. எங்களுக்கு கிடைக்கும் ஆதரவை நாளைக்கு காண்பீர்கள் எனக்கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர்குலைக்க பா.ஜ.க முயல்கிறது” - திருமாவளவன் குற்றச்சாட்டு

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
Thirumavalavan alleges BJP is trying to disrupt law and order in Tamil Nadu

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கை மனுக்களை வைத்திருந்தார். 

இது குறித்து திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது, “பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமின்றி, இதனை திட்டமிட்டவர்கள் இதனை நடைமுறைப்படுத்திய கூலிக்கும்பல் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம். தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர்குலைத்து ஒரு பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சில அரசியல் கட்சிகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன. 

குறிப்பாக, பா.ஜ.கவுக்கு இந்த செயல் திட்டம் இருப்பதை அறிய முடிகிறது. ஆகவே, ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கூட ஒரு அரசியல் செயல் திட்டம் வாய்ப்பு இருப்பதாக வி.சி.க கருதுகிறது. ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்த சில நிமிடங்களில், பா.ஜ.கவை சேர்ந்த ஒருவர் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். காவல்துறை நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்னதாகவே, பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை வைப்பதற்கு முன்னதாகவே, எடுத்த எடுப்பிலேயே தமிழக அரசு விசாரிக்கக் கூடாது, ஒன்றிய அரசின் கட்டுபாட்டில் இருக்கக்கூடிய சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று பா.ஜ.கவின் குரலாக இருந்தது. ஆருத்ரா நிறுவனத்திற்கும், பா.ஜ.க.வைச் சேர்ந்த சிலருக்கும் இடையில் உள்ள உறவு குறித்து விவாதிக்கப்பட்டு வருவதை நாம் பார்க்கிறோம். சம்பந்தப்பட்டவர்கள் பா.ஜ.க கட்சியில் பொறுப்பில் இருக்கிறார்கள். 

ஆம்ஸ்ட்ராங் கொலையில், ஆருத்ரா விவகாரமும் பேசப்படுகிறது. பா.ஜ.க இதில் வலிந்து சி.பி.ஐ விசாரணை கோருகிறது. இது போன்ற விவகாரங்கள் புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்தக்கூடியவையாக உள்ளன. அவர்களின் செயல் திட்டம் என்பது திமுக அரசுக்கு எதிராக பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும், சட்ட ஒழுங்கை சீர் குலைக்க வேண்டும் என்பதாக தான் இருக்கிறது. முன்னாள் முதல்வர் கலைஞர் மீது கருத்தியல் விமர்சனங்களை வைக்கலாம். அரசியல் விமர்சனங்களை வைக்கலாம். ஆனால், அவரை கொச்சைப்படுத்துவதன் மூலம் மேலும் பதற்றத்தை உருவாக்க வேண்டும் என்று அவர்களின் நோக்கங்களை உணர முடிகிறது. ஆகவே, சட்ட ஒழுங்கை காப்பாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம். 

நீட் தேர்வு குறித்தும், திருமண சட்டங்கள் சீராய்வு தொடர்பாக மனு ஒன்றை அளித்திருக்கிறோம். நீட் விவகாரத்தில் தற்போது நாடு முழுவதும் விவாதம் நடந்துள்ளது. நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது. நீட் தேர்வில் ஊழல் முறைகேடு நடந்துள்ளன. அதை மூடி மறைக்க பா.ஜ.க முயல்கிறது. நீட் எதிர்ப்பு நடவடிக்கையாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட முதல்வரிடம் வலியுறுத்தினேன்” என்று கூறினார். 

Next Story

பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
BJP Treasurer SR Shekhar CBCID Police Interrogated 

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் “ஏற்கனவே என்னிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினார். இருப்பினும் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து சம்மன் அனுப்பி வருகின்றார். எனவே இந்த விவகாரம் தொடர்பாக தன்னை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். 

BJP Treasurer SR Shekhar CBCID Police Interrogated 

அப்போது நீதிபதி எஸ்.ஆர்.சேகரை சிபிசிஐடி விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டார். மேலும் அவரது செல்போனை ஒப்படைக்கும்படி சிபிசிஐடி போலீசார் வலியுறுத்தக் கூடாது எனவும் தெரிவித்தார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் சிபிசிஐடி விசாரணைக்கு சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று (11.07.2024) காலை ஆஜரானார். காலை 10.30 மணிக்கு ஆஜரானவரிடம் மாலை 06.30 மணி வரை என அவரிடம் சிபிசிஐடி போலீசார் சுமார் ஏழரை மணி நேரம் விசாரணை நடத்தினர். இவரிடம் 190 கேள்விகளை சிபிசிஐடி போலீசார் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு எஸ்.ஆர்.சேகர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.