Skip to main content

புதுச்சேரியில் பஸ் கட்டணம் உயர்வு

Published on 18/10/2017 | Edited on 18/10/2017

புதுச்சேரியில் பஸ் கட்டணம் உயர்வு

புதுச்சேரி  அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதன் அறிவிப்பு இன்று வெளியானது.  அதன்படி நகரப் பேருந்தின் ஆரம்ப கட்டணம் ஐந்து ரூபாயில் இருந்து ஏழு ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆரம்ப கட்டணத்திற்குப் பிறகு 3 கி.மீட்டர் தூரத்திற்கு 2 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கட்டணம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

விரைவு அல்லாத பேருந்துகளில் ரூ.5-ல் இருந்து 8-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு கி.மீட்டருக்கு 40 பைசாவில் இருந்து 70 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது. விரைவுப் பேருந்தில் 50 பைசாவில் இருந்து 90 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்