டெல்லியில் தமிழக விவசாயிகள் 75-வது நாளாக போராட்டம்

இதனை கண்டித்தும், உடல் நலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு வருவதாக கேள்விப்பட்டு விவசாயிகள் தமிழ்நாடு இல்லத்துக்கு சென்றனர். ஆனால் முதல்வர் வராததால் விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.