ரஜினியுடன் திருநாவுக்கரசர் சந்திப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசர் பொறுப்பேற்றதையொட்டி, நடிகர் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக திருநாவுக்கரசர் இன்று காலை சந்தித்தார். அப்போது இருவரும் சால்வை அணிவித்துக்கொண்டனர். இதேபோல் எம்.ஜி.ஆர். கழகம் தலைவர் ஆர்.எம்.வீரப்பனையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
