பிரதமர் மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தமிழகம் வருவதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisment

chennai international airport high security pm modi sep 30th arrive at tamilnadu

இரண்டாவது முறையாக பிரதமராகப் பதவியேற்ற பின்னர் பிரதமர் நரேந்திர மோடி முதன் முறையாக தமிழகம் வருகிறார். செப்டம்பர் 30- ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி ஐஐடி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

மேலும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 24- ஆம் தேதி சென்னை வருகிறார். தமிழகத்திற்கு முக்கிய பிரமுகர்கள் அடுத்தடுத்து வருவதையொட்டி சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை பழைய விமான நிலையம் தமிழக போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.