Skip to main content

தொடர்ந்து 30 மணிநேர ஊரடங்கில் தமிழகம்!! 

Published on 24/04/2021 | Edited on 24/04/2021

 

 Tamil Nadu in a continuous 30 hour curfew

 

தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தியபோதும், கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மேலும் சில புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு இன்று (24/04/2021) வெளியிட்டுள்ளது. அதன்படி, திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கூட்ட அரங்குகள், பார்கள் இயங்க அனுமதி இல்லை. பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை.

 

சென்னை மாநகராட்சி உள்பட மாநகராட்சிகள், நகராட்சிகளில் சலூன், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதியில்லை. புதுச்சேரி தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பதிவு கட்டாயம். ஓட்டல், டீ கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தால் இ-பதிவு காட்டவேண்டும். வழிபாட்டுத் தலங்களில் மக்களுக்கு அனுமதி இல்லை.

 

தனியார், அரசுப் பேருந்துகளில் நின்றுகொண்டு பயணிக்க அனுமதியில்லை. இறுதி ஊர்வலங்களில் 25 பேரும், திருமண நிகழ்ச்சியில் 50 பேரும் மட்டும் கலந்துகொள்ள அனுமதி. கோவில் குடமுழுக்கில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. கோயில் ஊழியர்கள் மட்டும் பங்கேற்கலாம். குறைந்தபட்சம் 50 சதவிகிதம் ஐ.டி ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இன்று இரவு 10 மணிக்கு இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழுநாளும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட உள்ளது. இதனால், தமிழகத்தில் 30 மணி நேரம் தொடர்ந்து ஊரடங்கு இருக்கும். அதன் பின் திங்கட்கிழமையில் இருந்து இன்று மாலை தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தொடரும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்