இயக்குனர் பாலச்சந்தர் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த்,செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார் .அவர் கூறியதாவது ,

Advertisment

திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

திருவள்ளுவர் மிகப்பெரிய ஞானி. ஞானிகள், சித்தர்கள் மதத்திற்கு அப்பார் பட்டவர்கள். அவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர். அவர் நாத்திகர் இல்லை அவர் ஆத்திகர்.அதை மறுக்கவும் முடியாது மாற்றவும் முடியாது. பாஜக அவர்களோட முகநூல் கணக்கில் காவி உடை அணிவது போல் பதிவிட்டார்கள். அது அவர்களோட தனிப்பட்ட உரிமை. நாட்டில் பல பிரச்சனைகள் இருக்கும் இந்த நேரத்தில் இதை சர்ச்சை ஆகியிருக்க வேண்டாம்.

Advertisment

லதா ரஜினிகாந்த் மற்றும் முதலமைச்சர் சந்திக்க போறார்கள். அதை பற்றி?

குழந்தைகளுக்காக, மக்களுக்காகவும் ஒரு நிறுவனத்தை ஆரமிக்க இருக்கிறார்கள். அதை பற்றி பேச தான் அவர்கள் அங்கு சென்றுள்ளார்.

BJP PARTY ACTOR RAJINI KANTH SPEECH

உள்ளாட்சி தேர்தலில் உங்கள் கட்சி போட்டியிடுமா?

நாங்கள் போட்டியிட மாட்டோம்.

பொன். ராதாகிருஷ்ணன் நீங்கள் பாஜகவில் இனைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதை பற்றி விவாதிக்க பட்டதா?

Advertisment

அவர் எந்தவிதமான அழைப்பு விடவில்லை. பாஜக சாயம் என் மேல் பூச முயற்சி நடைபெறுகிறது. திருவள்ளுவர் போல என் மீதும் அந்த முயற்சி நடந்து வருகிறது. திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன்.