திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது ஜெ.ஊத்துப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாலம்மாள் கோவிலில் 13 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசித்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

dindigul local festival crowd of peoples

அதைத் தொடர்ந்து இந்தாண்டுக்கான விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவில் ஸ்ரீ மாலம்மாள், ஸ்ரீ சென்னப்பன், ஸ்ரீ கருப்பணசாமி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு ஆராதனைகள் நடைபெற்றன. மூன்று நாட்கள் நடைபெற்ற இத்திருவிழாவின் இறுதி நாளில் பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் விதமாக தலையில் தேங்காய் உடைத்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

dindigul local festival crowd of peoples

Advertisment

Advertisment

இதில் ஆண், பெண் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்து பூசாரி நேர்த்திக்கடனை நிறைவேற்றி வைத்தார். மேலும் சாட்டையால் அடி வாங்கும் நேத்திகடன் நிகழ்வும் திருவிழாவில் நடைபெற்றது. இதில் பூசாரி பக்தர்களை சாட்டையால் அடித்து அவர்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றி வைத்தார். இந்த வினோத திருவிழாவை காண தமிழகம் முழுவதிலிருந்தும் 3000- க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து விட்டு சென்றனர்.