நடத்தையில் சந்தேகம்; இளம்பெண் கழுத்து நெரித்து கொலை, கணவர் கைது!
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகிலுள்ள சார்வாய் என்ற ஊரை சேர்ந்தவர் சிபி (வயது 22). நெல் அறுவடை இயந்திரத்தின் ஓட்டுனரான இவருக்கும், பெத்தநாயக்கன் பாளையம் அருகிலுள்ள ஓலைப்பாடி என்ற ஊரைச்சேர்ந்த குமுதவல்லி (வயது 18). என்ற பெண்ணுக்கும் கடந்த ஏழு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.
குமுதவல்லிக்கு ஏற்க்கனவே திருமணம் நடந்து கனவரை பிரிந்து வாழ்ந்தவர். இவரை சிபி காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, வீட்டில் குமுதவல்லி இறந்து கிடப்பதாக, அவரது தந்தை சக்திவேலுக்கு, சிபி செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
குமுதவல்லியின் பெற்றோர் மாறும் உறவினர்கள் சார்வாய் கிராமத்துக்கு வந்தவுடன், “உங்கள் மகள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாள். உடலை உடனே அடக்கம் செய்துவிடாலாம்” என்று சிபி கூறியுள்ளார்.
இதனால், சந்தேகமடைந்த குமுதவல்லியின் தந்தை சக்திவேல் தலைவாசல் காவல்நிலையத்தில் மகளின் சாவில் சந்தேகம் உள்ளதாக புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து குமுதவல்லியின் உடலை காண போலீசார் வந்ததை அடுத்து சிபி, அவரது தாய் சின்னம்மாள் இருவரும் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டனர்.
இதையடுத்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த தலைவாசல் போலீசார், குமுதவல்லியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கே மருத்துவர்கள் பரிசோதித்ததில், குமுதவல்லி கழுத்து நெரித்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்காக பதிவுசெய்த போலீசார் சிபியை தேடிவந்தனர்.
நேற்று மாலை சார்வாய் ஓடை அருகே பதுங்கியிருந்த சிபியை போலீசார் கைதுசெய்தனர். போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், “குமுதவல்லிக்கு 15-வயதிலேயே வேறு ஒருவருடன் திருமணமாகி விட்டது. குமுதவல்லி அவரை பிரிந்து வாழ்ந்து வந்தநிலையில் நான் அவரை காதலித்து திருமணம் செய்துகொண்டேன். நான் நெல் அறுவடை இயந்திரம் ஓட்டுவதற்காக அடிக்கடி வெளியூர் சென்றுவிடும் நேரத்தில், குமுதவல்லி வேறு சில ஆண்களுடன் தொடர்பு வைத்துள்ளதாக சந்தேகப்பட்டதால் எங்களுக்குள் சண்டை வந்தது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த நான் குமுதவள்ளியின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, அவர் விஷம் குடித்ததாக போய் சொன்னேன்” என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதுகுறித்து மேலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- பெ.சிவசுப்பிரமணியம்