vijayakanth

Advertisment

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கலையுலகின் 40ஆம் ஆண்டு பாராட்டு விழா மாநாடு காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை ரோடு, கரசங்களில் நாளை (15.04.2018) ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் மங்களவாத்தியம் தொடங்கி, கலைநிகழ்ச்சி, பட்டிமன்றம் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. மாலை 6.00 மணிக்கு மேல் சினிமா கலைத்துறையின் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், கலையுலகைச் சார்ந்த பிரமுகர்கள் என அனைவரும் கலந்துகொள்கிறார்கள்.