மாணவர் போராட்டத்தில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை போக்கு வரத்து பாதிப்பு

அரியலூர் அனிதாவின் மரண செய்தி கேட்டு தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர் மத்தியில் பெரிய பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இணையதளத்தில் இது பற்றிய பதிவுகள் நேற்றிலிருந்து வெகுவேகமாக நீட் தேர்வுக்கு எதிராவும், மத்திய மாநில அரசுகளை கண்டித்து பதிவுகள் வைரலாக பரவ ஆரம்பித்தது. இதனால் தமிழகம் முழுவதும் ஆங்காங்ககே மாணவர் போராட்டத்திலும், ஆர்பாட்டத்திலும் ஈடுபட ஆரம்பித்தனர்.
இதன் ஒரு பகுதியாக தமிழகத்தின் மையபகுதியான திருச்சியில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பாக சமயபுரம் அடுத்த பகுதியில் பொறியியல் கல்லூரிகள், கேட்டரிங் கல்லூரிகள் நிறைந்த பகுதி என்பதால் நேற்று 10 மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து 1 மணிநேரத்திற்கு மேலாக அனைத்து வாகங்களும் வாகன நெரிசலில் சிக்கியது. நெடுஞ்சாலையிலே வாகனங்கள் நிறுத்தப்பட்டது.
தகவல் தெரிந்த சமயபுரம் இன்ஸ்பெக்டர் ஞானவேல் தலைமையில் போரட்ட களத்திற்கு வந்து மாணவர்களிடம் சமாதன பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
-ஜெ.டி.ஆர்