Skip to main content

அமித்ஷா மீதும் அவர் மகன் மீதும் காங்கிரஸ் தெரிவிக்கும் குற்றசாட்டுகள் ஆதாரமற்றது: அனந்த்குமார்

Published on 09/10/2017 | Edited on 09/10/2017
அமித்ஷா மீதும் அவர் மகன் மீதும் காங்கிரஸ் தெரிவிக்கும் குற்றசாட்டுகள் ஆதாரமற்றது: அனந்த்குமார் பேட்டி

பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா மீதும் அவர் மகன் மீதும் காங்கிரஸ் கட்சியினர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவதாகவும, அவதூறு பரப்புவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என மத்திய அமைச்சர் அனந்த்குமார் தெரிவித்தார்.

இது குறித்து இன்று கோவை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் அனந்த்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

கேரள மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. இடதுசாரிகளால் பொது மக்கள் அமைதிக்கு பங்கம் ஏற்ப்பட்டு வருகின்றது. பா.ஜ.க தலைவர் அமித்ஷா கடந்த மூன்றாண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றார். காங்கிரஸ் கட்சியினர் அடிப்படை ஆதாரமற்ற குற்றசாட்டிகளை அவர் மீதும் ,அவர் மகன் மீதும் முன் வைக்கின்றனர்.

காங்கிரஸ் தெரிவிக்கும் குற்றசாட்டுகள் ஆதாரமற்றது என பா.ஜ.க சாரபி்ல் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அவதூறு கிளப்புவர்கள் மீது கிரிமினல் மற்றும் அவதூறு வழக்குகள் தொடரப்படும் எனவும் தெரிவித்தார். தங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் கட்சி முதலில் பதில் அளிக்க வேண்டும். பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை.

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் பா.ஜ.க சார்பில் நடத்தப்படும் ஜன ரக்‌ஷ பாதயாத்ரா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கேரளா சென்றார். பேட்டியின் போது பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர

சார்ந்த செய்திகள்