ரயில் பயணிகள் சேவை மேம்பாட்டுக்குழு மதுரை ரயில்நிலையத்தில் இன்று ஆய்வு!
ரயில் பயணிகள் சேவை மேம்பாட்டுக்குழு என்ற பெயரில் பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா உள்ளிட்ட 13 பேர் கொண்ட கமிட்டி அமைத்து, தமிழகத்தில் உள்ள 122 ரயில் நிலையங்களில் அடிப்படை தேவைகளை நிர்வாகத்திடம் அறிக்கை தாக்கல் செய்து மத்திய அரசிடம் ஒப்படைக்குமாம். அதேபோல், இன்று மதுரை ரயில்நிலையத்தில் உள்ள பயணிகளிடம் குறையை கேட்டறிந்து, உணவகம், கழிவறை, மேற்கூரை ஆகியவைகளை சரிபார்த்து உள்ளே சென்று பார்வையிட்டு, அந்த துறையைச் சேர்ந்த அதிகாரிகளிம் சுட்டிக்காட்டினர் அந்தக்குழுவினர். பின்பு ராமேஸ்வரம் ரயில் நிலையம் செல்கிறது இந்தக்குழு. இந்தக்குழுவில் பாரதிய ஜனதா மதுரை மாவட்டத்தலைவர் சசி ராமன், மொட்டை ஹரி ஆகியோரும் இருந்தனர்.

- சாகுல்