Skip to main content

'இபிஎஸ் பிறந்தநாளை அறிந்து இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டுள்ளது'-வைகை செல்வன் பேச்சு

Published on 12/05/2025 | Edited on 12/05/2025
'India-Pakistan war stopped after learning about EPS's birthday' - Vaigai Selvan's speech

முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான  எடப்பாடி பழனிசாமியின் 71 ஆவது பிறந்தநாள் இன்று (12/05/2025) அதிமுக கட்சி நிர்வாகிகளால் பல இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னை திருவொற்றியூரில் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா சார்பாக நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் கலந்து கொண்டார். நலத்திட்ட உதவிகளை வழங்கி விட்டு விழா மேடையில் பேசிய அவர், ''இந்திய-பாகிஸ்தான் போர் வருகிறது ஆகவே பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எல்லாம் வேண்டாம். விட்டுவிடுங்கள் என எடப்பாடி பழனிசாமி சொன்னார். நல்லவேளை நேற்றுதான் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் இன்று என அறிந்து இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டிருக்கிறது'' என்றார்.

சார்ந்த செய்திகள்