/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nirmala_5.jpg)
நிர்மலாதேவியின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம். பேராசிரியை நிர்மலாதேவியின் ஜாமீன் மனு 3வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது.
விருது நகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரில் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்நிலையில், அவர் ஜாமீன் கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
உதவிப்பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)