இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.நல்லப்பன்(87) காலமானார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் 1980 முதல் 1984 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1986 முதல் 1991 வரை யூனியன் சேர்மனாகவும் 1996 முதல் 2006 வரை கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி தலைவராகவும் பணியாற்றினார். மேலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினராகவும் இருந்தார்.
உடல்நிலை சரியில்லாமல் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நல்லப்பன், நேற்று காலமானார்.