பா.ஜ.கவின் மதவெறி அரசியலைக் கண்டித்து
மா.,கம்யூ., ஆர்ப்பாட்டம்!

ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.கவின் வன்முறை, மதவெறி அரசியலைக் கண்டித்தும், முற்போக்காளர்கள், எழுத்தாளர்கள் கொலை செய்யப்படுவதைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாவட்ட செயலாளர் எ.சுந்தரராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மத்தியக் குழு உறுப்பினர் அ.சவுந்திரராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், மாநிலக் குழு உறுப்பினர் வேல்முருகன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
படம் - அசோக்குமார்