சென்னையில் நடைபெற்ற 'கமல் 60' நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் எஸ்ஏ.சந்திரசேகரன் மேடையில் அவர் பேசும்பொழுது ரஜினியும் கமலும் அரசியலுக்கு வருவது என்பது உறுதி. அதேநேரத்தில்இருவரும் அரசியலில்சாதிப்பதும் உறுதி.ஆனால் அப்படி சாதிப்பது என்றால் இருவரும் தனித்தனியே அரசியலுக்கு வருவதை விட இருவரும் ஒன்றாக சேர்ந்து அரசியல் செய்தால் கண்டிப்பாக தமிழகத்தில் நல்ல ஆட்சியை, அராஜகம் அற்ற ஆட்சியை தருவார்கள்.அவர்களுக்கு பிறகு அரசியலில் அவரது தம்பிகளுக்கும்இருவரும் இடம்விடவேண்டும் என்று கூறியிருந்தார்.

Advertisment

kamalhasan interview

இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசுகையில்,

Advertisment

தமிழ்நாட்டின் நலனுக்காக, மேம்பாட்டிற்காகநானும், ரஜினிகாந்தும் இணைந்து பயணிக்க வேண்டும் என்றால் இணைந்து பயணிப்போம். நாங்கள் இருவரும் இணைவதற்கான அவசியம் ஏற்பட்டால் இணைவோம். ரஜினி சொன்ன அந்தஅதிசயம் உண்மைதான் என்றார்.