ஜாக்டோ-ஜியோ போராட்ட விளக்கப் பேரவை
அரசு ஊழியர் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ-ஜியோ) சார்பில் ‘போராட்டமும் நீதிமன்ற நடவடிக்கைகளும்’ என்ற தலைப்பில் போராட்ட விளக்கப் பேரவைக் கூட்டம் புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் கே.நாகராஜன், எம்.ராஜாங்கம், எஸ்.செல்வராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில் கலந்துகொண்டு தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் டி.செந்தில்குமார், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத் துணைச் செயலாளர் நா.சண்முகநாதன், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் ஆ.மதலைமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் ஆர்.ரெங்கசாமி, க.கருப்பையா, ஜி.கணேசன், சுபாஷ்சந்திரபோஸ், ஆர்.மணவாளன், கே.குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பகத்சிங்