
சென்னையில் பூட்டிய வீட்டில் முதியவர்கள் இருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூளைமேடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த இரு முதிய தம்பதிகள் இறந்து அழுகிய நிலையில், வீட்டுக்குள் இருந்து சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட ஜீவன்- தீபா ஆகிய முதிய தம்பதிகள் இருவரின் உடலும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பு பகுதியில் சம்பந்தப்பட்ட வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அருகில் வசித்த மக்கள் கொடுத்த தகவலை அடுத்து போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கடந்த வாரம் கரோனா பரிசோதனைக்கு சுகாதாரத்துறை வந்தபோது இந்த இரு தம்பதிகளும் கரோனா பரிசோதனைக்கு ஒத்துழைக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் உயிரிழந்த இருவரும் கரோனாவால் உயிரிழந்தார்களா என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இருவரின் உடலும் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.