Skip to main content

ஐஏஎஸ், ஐபிஎஸ் மெயின் தேர்வு 28ல் தொடக்கம்

Published on 07/10/2017 | Edited on 07/10/2017
ஐஏஎஸ், ஐபிஎஸ் மெயின் தேர்வு 28ல் தொடக்கம்

முதல் நிலை தேர்வில் இந்தியா முழுவதும் 13,350 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 700 பேர் வரை தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான மெயின் தேர்வு வருகிற 28ம் தேதி தொடங்குகிறது. சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுக்கான ஹால் டிக்கெட் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.upsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது. மெயின் தேர்வு 28ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது. 28ம் தேதி காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை முதல் தாள் தேர்வு (கட்டுரை வடிவிலானது), 30ம் தேதி காலை இரண்டாம் தாள் (பொது அறிவு 1), மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மூன்றாம் தாள் (பொது அறிவு 2) தேர்வும் நடக்கிறது. 

31ம் தேதி காலையில் 4ம் தாள் (பொது அறிவு 3), பிற்பகலில் 5ம் தாள் தேர்வு (பொது அறிவு4), நவம்பர் 1ம் தேதி இந்திய மொழிகளில் ஒருதாள் தேர்வு, பிற்பகலில் ஆங்கிலம் தேர்வும், 3ம் தேதி காலையில் விருப்பப்பாடம் முதல் தாள், மாலை விருப்பப்பாடம் இரண்டாம் தாள் தேர்வும் நடக்கிறது. மெயின் தேர்வுக்கான ரிசல்ட் அநேகமாக வருகிற பிப்ரவரி இறுதியிலோ அல்லது மார்ச் தொடக்கத்திலோ வெளி வர வாய்ப்புள்ளது. மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்தகட்டமாக நேர்முக தேர்வு நடத்தப்படும் என சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி நிறுவன தலைவர் சங்கர் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்