
பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவனுடன் முறையற்ற தொடர்பில் இருந்த போது கணவன் கதவை தாழிட்டு கையும் களவுமாக பிடித்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா, ராமாராவ் பேட்டையை சேர்ந்தவர் லட்சுமணன். இறால் பண்ணை வைத்திருக்கும் லட்சுமணனுக்கு நாகலட்சுமி என்ற மனைவியும் இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும் உள்ளார். தினமும் இரவுவேளையில் தான் நடத்தி வரும் இறால் பண்ணை காவலுக்காக லட்சுமணன் செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.
மனைவி நாகலட்சுமி திருமணத்திற்கு முன்பு தனியார் பள்ளி ஒன்றில் கணினி துறையில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நாகலட்சுமிக்கு தான் பணியாற்றிய பள்ளியில் பயின்ற மணிகண்டா என்ற மாணவனுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி தனியாக வெளியில் சந்தித்து வந்த நிலையில் இவர்களது நட்பு முறையற்ற தொடர்பாக மாறியுள்ளது.

மனைவியின் சமீபத்திய நடவடிக்கைகளால் சந்தேகமடைந்த கணவன் லட்சுமணன் வழக்கம்போல் இறால் பண்ணைக்கு காவலுக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார். அந்த நேரத்தில் மாணவன் மணிகண்டா வீட்டுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென நள்ளிரவில் லட்சுமணன் மீண்டும் வீட்டிற்கு வந்த போது மாணவனுடன் பேராசிரியை முறையற்ற தொடர்பில் இருந்தது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் கதவை வெளிப்பக்கமாக தாழிட்ட லட்சுமணன் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அங்கு வந்த போலீசார் வீட்டில் பதுங்கி இருந்த மாணவன் மணிகண்டாவை அங்கிருந்து வெளியே கொண்டு வந்தனர். அப்போது ஆத்திரத்தில் லட்சுமணன் மாணவனை தாக்க முயன்றார். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. வெளியே வந்த மாணவனை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.