Skip to main content

அரை அடி உள்வாங்கிய கட்டிடத்தால் பரபரப்பு- குடியிருப்புவாசிகள் வெளியேற்றம்

Published on 04/05/2018 | Edited on 04/05/2018

நாகையில் மயிலாடுதுறையை அடுத்த அகரகீரங்குடியில் நஜிபுநிஷா என்பவருக்கு சொந்தமான மூன்றடுக்கு மாடி கட்டிடம் ஒன்றுள்ளது.

 

இந்த கட்டிடத்தில் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வந்தனர். மேலும் ஒரு மரம் இழைப்பகமும் செயல்பட்டுவந்த நிலையில் நேற்று உறங்கினக்கொண்டிருந்த குடியிருப்பு வாசிகள் திடீரென நில அதிர்வை உணர்ந்து  எழுந்து பதறியடித்து வெளியே ஓடிவந்தனர் அப்பொழுது வெளியே  கட்டிடத்தின் கீழ்ப்பகுதி விரிசல் ஏற்பட்டும் அரை அடி உள்வாங்கிய நிலையில் இருப்பதையும் கண்டு அதிர்ச்சியுற்றனர்.
 

nakai

 

கட்டி மூன்றே ஆண்டுகளில் இப்படி உள்வாங்கிய நிலை எவ்வாறு ஏற்பட்டது என திகைத்து கட்டிடம் இடிந்து விழுந்துவிடும் என்ற பயத்தில் அனைவரும் தங்களது உடமைகளை தீயணைப்புபடையினரின்  உதவியுடன் வெளியே கொண்டுவந்தனர்.

 

nakai

 

 

nakai

 

இதனை அடுத்து இதுபற்றி தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்தை அடைந்து சோதனை நடத்தினர் அதில் விவசாயநிலத்தில் சரியான அடிக்கல் செய்யப்படாமல் கட்டப்பட்டதால் விரிசல் ஏற்பட்டு கட்டிடம் உள்வாங்கியுள்ளது எனக்கூறி அந்த கட்டிடத்திற்கு சீல் வைத்தனர்.   

சார்ந்த செய்திகள்