திருச்சி மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்தவர் விவசாயி முருகேசன். இவர் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தன்னுடைய வீட்டில் வெள்ளை அடித்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். இதில் இன்று போகி பண்டிகையும் நாளை பொங்கல் விழாவும் நடைபெறுவதால் தீர்த்தம் படைப்பதற்காக தனக்கு சொந்தமான கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக சென்ற முருகேசன் தவறி கிணற்றுக்குள் விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் அறிந்து வந்த முசிறி தீயணைப்பு துறையினர் முருகேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
தீர்த்தம் எடுக்க சென்றவர் கிணற்றில் விழுந்து பலி!
Advertisment