Published on 24/09/2021 | Edited on 24/09/2021

நீலகிரியில் புலி தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தேவன் எஸ்டேட் பகுதியில் புலி தாக்கியதில் படுகாயமடைந்த சந்திரன் என்பவர் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே அந்தப் புலியால் அப்பகுதியில் இருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 'டி23' என்று அழைக்கப்படும் அந்தப் புலியால் கால்நடைகள் பல கொல்லப்பட்ட நிலையில், புலியைப் பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், சந்திரன் என்பவர் 'டி23' புலி தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்தார். அதன்பிறகு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சந்திரன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.