Skip to main content

டெங்கு பாதிப்புகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - திருமா வலியுறுத்தல்

Published on 20/10/2017 | Edited on 20/10/2017
டெங்கு பாதிப்புகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் - திருமா வலியுறுத்தல்

டெங்கு பாதிப்புகளால் தமிழகம் பாதிப்பைச் சந்தித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 

டெங்கு பாதிப்பால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போர்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொள்ள வேண்டும். டெங்குவால் ஏற்ப்பட்ட பாதிப்புகள் மற்றும் இழப்புகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற கேரள அரசின் நடவடிக்கை பாராட்டுக்குறியது. தமிழகத்தில் ஏற்கனவே 206 பேருக்கு கடந்த தி.மு.க அரசு ஆகம விதிகளின்படி அர்ச்சகராக நியமிக்க பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களுக்கான பணி நியமனத்தை தமிழக அரசு வழங்க வேண்டும்.

மெர்சல் படத்துக்கு எதிராக பா.ஜ.க போராடுவதை விடுத்து அப்படத்திற்க்கு அனுமதி வழங்கிய சென்சார் போர்டுக்கு எதிராக போரட்டம் நடத்துவது சரியாக இருக்கும்.
 
கலைஞர் தன்னம்பிக்கை நிறைந்த தலைவர். கோபாலபுரத்தில் இருந்து கோடம்பாக்கம் வரை காரில் பயணம் செய்யும் அளவுக்கு அவரது உடல் நிலை தேரி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்