
கிரிக்கெட் பந்தால் ஏற்பட்ட தகராறில் ஆசிரியரை ஒருவரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பகல்கோட் மாவட்டம் சவாலகி கிராமத்தைச் சேர்ந்தவர் 36 வயதான ராமு பூஜாரி. இவர், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, ராமு பூஜாரியின் வீட்டில் இரு கிரிக்கெட் பந்து பறந்து விழுந்தது. இந்த பந்தை, பவன் ஜாதவ் என்பவர் எடுக்க வந்துள்ளார். அப்போது ராமு பூஜாரி, அந்த பந்தை பவன் ஜாதவிடம் கொடுக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த ஜாதவ், ‘நீங்கள் பந்தை திருப்பித் தரவில்லை என்றால் நான் உங்கள் ரத்தத்தைக் குடிப்பேன். நாளை உங்களைப் பார்த்துக் கொள்கிறேன்’ என மிரட்டி அங்கிருந்து சென்றுள்ளார். இதையடுத்து கடந்த 13ஆம் தேதி, ராமு பூஜாரி வேலை செய்து கொண்டிருந்த நிறுவன அலுவலகத்திற்குள் மன்னிப்பு கேட்பது போல் பவன் ஜாதவ் வந்துள்ளார்.
ஆனால், ஆசிரியர் ராமு பூஜாரியை கடுமையான வார்த்தைகளால் திட்டிய ஜாதவ், தனது சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தை வைத்து தாக்கியுள்ளார். பூஜாரியின் கண்கள், நெற்றி போன்ற இடங்களில் பலமுறை தாக்கியுள்ளார். இதில், ராமு பூஜாரி ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்தார். இதையடுத்து அங்கிருந்த சிலர், ராமுவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். இதற்கிடையில் ராமு கொடுத்த புகாரின் அடிப்படையில், பவன் ஜாதவ் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.