sudden turn; Returned Governor

Advertisment

துணைவேந்தரை தேர்வு செய்யும் தேடுதல் குழுவை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி திரும்பப் பெற்றுள்ளார்.

தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை தேர்வு செய்ய தமிழக ஆளுநர் மூன்று தேடல் குழுக்களை அமைத்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தன்னால் நியமிக்கப்பட்ட தேர்தல் குழுவை தான் திரும்பப் பெறுவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், யுஜிசி-ன் விதிமுறைகளை பின்பற்றி தமிழக அரசு உரிய வகையில் தேடுதல் மற்றும் தேர்வுக் குழுவை அமைக்கும் என நம்புவதாகவும், எனவே தன்னால் அமைக்கப்பட்ட துணைவேந்தர்களை தேர்வு செய்யும் தேடுதல் குழுவை திரும்ப பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ஏற்கனவே தமிழக அரசுக்கும் தமிழக ஆளுநருக்கு இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து முரண்கள் ஏற்பட்டு வரும் நிலையில், நிலுவையிலிருந்த விவகாரத்தை ஆளுநரே திரும்பப்பெற்று முடிவுக்கு கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.