ar

திமுக தலைவர் கலைஞருக்கு நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட உடல் நலக்குறைவினால் அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு பின்னர் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவர்கள் குழு கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

Advertisment

ar

இதையடுத்து கலைஞர் பூரண நலம் பெற வேண்டி திமுக தொண்டர்கள் கோவில்களில் வழிபாடு செய்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் சென்னை அடையாறில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் கலைஞர் நலம்பெற வேண்டி அர்ச்சனை செய்து, விபூதி, குங்குமம், தேங்காய், வாழைப்பழத்துடன் கூடிய அந்த அர்ச்சனைப் பையை காவேரி மருத்துவமனைக்கு எடுத்துக்கொண்டு வந்தார்.

Advertisment