சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர்
100க்கும் மேற்பட்டோர் கைது!

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலை பேருந்து நிலையம் முன்பு கரும்பு நிலுவை தொகை உடனே வழங்க வேண்டும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெறப்பட்ட கடன்களை ரத்து செய்ய வேண்டும், நதி நீர் பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து மாவட்ட செயலாளர் ஸ்டாலின் மணி தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
- எஸ்.பி.சேகர்