Skip to main content

தீவிரமாகும் ஏ.டிஸ். கொசுப்படைகளின் அட்டாக்! தொடரும் டெங்கு மரணங்கள்!

Published on 10/10/2017 | Edited on 10/10/2017
தீவிரமாகும் ஏ.டிஸ். கொசுப்படைகளின் அட்டாக்!
தொடரும் டெங்கு மரணங்கள்!

 
மாநிலம் முழுக்க ஏ.டிஸ். கொசுப்படைகளின் அட்டாக் தீவிரமெடுத்த நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகாரித்துக் கொண்டே போகிறது. அந்தக் கொசுப்படைகளின் தாக்குதலுக்கு மாநிலத்தில் எந்த ஒரு மாவட்டமும் தப்பித்ததில்லை. வருடம் தோறும் டெங்கு பாதிப்பிற்குட்படும் நெல்லை மாவட்டம் தற்போது டெங்கு காய்ச்சலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறையின் பாதுகாப்பு, மற்றும் தடுப்பு ஏற்பாடுகளையும் தாண்டிய நிலையிலிருக்கிறது டெங்குத்தாக்குதல். கடந்த 6 மாதங்களின் தீவிரத்தாக்குதல் காரணமாக கடந்த மாதங்களில் டெங்கு காய்ச்சலால் 16 பேர் வயது பலியாகியுள்ளனர். அரசு மருத்துவமனையில் டெங்குவால் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 55-ஐ தாண்டுகிறது. தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணக்கில் வரவில்லை.

இந்த நிலையில் சங்கரன்கோவில் அருகேயுள்ள வேலாயுதபுரம் கிராமத்தின் விவசாயி, ராமசாமியின் 3 வயது குழந்தையான ஆர்த்திக்கு கடந்த மூன்று நாட்களாகக் காய்ச்சல் இருந்துவந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பார்த்தவருக்கு அது டெங்கு என கண்டறிப்பட, அந்தக் குழந்தையை பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

அங்கு குழந்தை ஆர்த்தி டெங்கு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றிப் போகவே குழந்தை ஆர்த்தி இன்று காலை உயிரிழந்தார். தகவல் கேட்டு உறவினர்கள் கலக்கமடைந்தனர்.

கதறி அழுத குழந்தை ஆர்த்தியின் பாட்டி, நாலு நாளா காய்ச்சல். தனியார் ஆஸ்பத்திரியில் பாத்தும் தீராம அரசாங்க ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனப்பயும் முடியலை. அநியாமா எம் பேத்தி டெங்குக் காய்ச்சல்ல மரணமாயிட்டாளே என நெஞ்சிலடித்துக் கொண்டது வேதனையைக் கிளப்புகிறது.

- பரமசிவன்

சார்ந்த செய்திகள்