நாடாளுமன்றத்தில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பியுமான தொல்.திருமாவளவன், நரிக்குறவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் இணைக்கக் கோரி அடுத்த வாரம் நாடாளுமன்ற விவாதத்தில் எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
அவர், “நரிக்குறவர் என்றழைக்கப்படும் குருவிக்காரர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டுமென 1965 ஆம் ஆண்டு மத்திய அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட லோக்குர் கமிட்டி பரிந்துரைத்தது. நரிக்குறவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் இணைப்பதற்கு மத்திய அரசு உடனடியாக அரசியலமைப்புச் சட்ட திருத்தம் (பட்டியல் இனம் & பழங்குடியினர்) 2019 மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.” என வலியுறுத்தினார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });