Published on 24/08/2021 | Edited on 24/08/2021

சென்னை அருகே வங்கக்கடலில் 5.1 ரிக்டர் அளவில் பகல் 12.35 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில நடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து வடகிழக்கில் 320 கி.மீ தொலைவில் வங்கக்கடலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.