Dog carcass in drinking water tank; Again a sensational incident

ஒரு வருடத்திற்கு முன்புபுதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஒரு ஆண்டை கடந்து தற்பொழுது வரை இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. தொடர்ந்து சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisment

இதேபோன்று பொது இடங்களில் மனிதக் கழிவுகள் கலக்கப்படுவது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. அண்மையில் காஞ்சிபுரத்தில் பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டதாக பரபரப்பு புகார்கள்எழ, அந்த தொட்டி இடித்து அகற்றப்பட்டது.

Advertisment

இந்நிலையில், சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே நீர்த்தேக்க தொட்டியில் இறந்த நாயின் சடலம் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் உள்ள துட்டம்பட்டி ஊராட்சியில் உள்ள ஆட்டையான் வளைவு பகுதியில் உள்ள நீர்தேக்க தொட்டியில் இருந்து அரசுப் பள்ளி மற்றும் ஐந்து கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வழக்கம்போல குடிநீர் ஆபரேட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி தண்ணீர் நிரம்பியுள்ளதாஎன்று சோதனை செய்தபோது அங்கு நாய் ஒன்று இறந்த நிலையில் நீரில் மிதந்து கொண்டிருந்தது. இதுகுறித்து உடனடியாக தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த தாரமங்கலம் போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.