incident in kanjipuram

Advertisment

அதிக கோவில்களைக் கொண்டகாஞ்சிபுரத்தில் கோவில்சிற்பவேலைப்பாடுகள் எழில் நிறைந்தவையாக இருக்கும். 2019-ஆம் ஆண்டு (40 ஆண்டுகளுக்கு ஒரு முறை)உலக பிரசித்தி பெற்ற அத்திவரதர் தரிசனமும்காஞ்சிபுரத்தின்முக்கியகோவில்வழிபாட்டுநிகழ்வில் ஒன்று. அப்படிப்பட்ட காஞ்சியில், சாக்கடை வெளியேற்றும் கால்வாயில், கோவிலின்சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்ததூண்கள்வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

incident in kanjipuram

காஞ்சிபுரம் பெருநகராட்சி வார்டு எண் 22 -க்கு உட்பட்ட பஞ்சுப்பேட்டை துணைமின் நிலையத்தின் பின்புறம் உள்ள சாக்கடை கால்வாயின் கரையோரத்தில், சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்ட கல் தூண்கள் கரை போன்று அடுக்கப்பட்டுள்ளது. அடுக்கப்பட்டுள்ள இந்த கல் தூண்கள் எந்த கோவிலைச் சேர்ந்தவை எனத் தெரியவில்லை எனக் கூறும் பொதுமக்கள் இவை ஏகாம்பரநாதர் கோவில் தூண்களாகக் கூட இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். அப்பகுதி மக்கள் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மட்டுமல்லாது முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகம் வரை புகார்களை முன்வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறுகின்றனர்.

Advertisment

incident in kanjipuram

சாக்கடை கால்வாயின் கரையில்அடுக்கிவைக்கப்பட்டுள்ள அந்தத் தூண்களில்சிவன் உட்பட பல தெய்வங்களின் உருவங்கள்இடப்பெற்றுள்ளதாகக்கூறும் அப்பகுதி மக்கள்,வரலாற்று பொக்கிஷமாகப் பேணி காக்கவேண்டிய தூண்கள்இப்படி கால்வாயில் அடிக்கி வைக்கப்பட்டுள்ளது வேதனையைத் தருகிறது. எனவே கண்டிப்பாக இந்தத் தூண்களை ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும், அதை உரிய இடத்தில்கொண்டுசேர்த்துப் பராமரிக்க வேண்டும்எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

'நல்லதோர் வீணை செய்தே - அதைநலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?' என்ற பாரதியின் பாடல் நாம் அறிந்ததுதான்.

Advertisment

இப்படி வரலாற்றுப் பொக்கிஷத்தைப் புழுதியில்விட்டெறிந்துவிட்டதோஅறநிலையத்துறைஎன்ற கேள்விஎழுவதை தடுக்கமுடியவில்ல...