Skip to main content

17 வயது சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை; இளைஞர் மீது பாய்ந்த வழக்கு!

Published on 08/05/2025 | Edited on 08/05/2025

 

baby girl was born to a 17-year-old girl

மதுரை அருகே ள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பிரசன்னா(25) என்பவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை திருமணம் செய்திருக்கிறார். 

இதனைத் தொடர்ந்து மதுரையில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து சிறுமியுடன் பிரசன்னா குடும்பம் நடத்தி வந்துள்ளார். அதன்பின் சிறுமி கர்ப்பம் ஆகியுள்ளார். இந்த நிலையில் சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதன் காரணமாக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்துள்ளனர்.  அங்குச் சிறுமிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. 

இதையடுத்து 17 வயது சிறுமிக்கு  பெண் குழந்தை பிறந்து குறித்து சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் பிரசன்னா மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்